TAMIL JATHAGAM | ஜோதிட தகவல்களின் மகா சங்கமம்
நமது TAMIL JATHAGAM வலைதளத்தில் ஜோதிடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து அனைவருக்கும் புரியும் வகையில் நாள்தோறும் பதிவிட்டு வருகிறோம்.
ஜாதக கட்டம், ஜோதிடம், ஆன்மீகம், திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்கள் மற்றும் திருமணப் பொருத்தம், ஜாதக பொருத்தம், ராசி நட்சத்திர பொருத்தம், பெயர் பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், குரு பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள் போன்ற ஜோதிடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் நமது வலைதளத்தில் நீங்கள் காணலாம்.
ஜாதகம் பார்க்க வேண்டும் தமிழில் மற்றும் ஜாதக கட்டம் | Tamil Jathagam Generator
பிறந்த தேதி வைத்து ஜாதக கட்டம் பார்த்தல் ↓
80 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற கிளிக்
உங்களது ஜாதகத்தில் உள்ள ராசி கட்டம், நவாம்சம், அடிப்படை கணக்கீடுகள், தசா புத்தி கணக்கீடுகள், யோகங்கள், ஜாதக பலன்கள், செல்வம், சொத்து, கல்வி, நோய், திருமண வாழ்க்கை, தொழில் , தசா புத்தி பலன்கள், உங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா அல்லது இல்லையா, உங்களது ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளதா அல்லது இல்லையா, பரிகாரங்கள், இந்த 2024 வருடத்தில் உள்ள கிரகங்களின் கோச்சார பலன்கள், தொழில் முன்னேற்றம் காலம், வீடு கட்டுவதற்கு உகந்த காலம், திருமணத்திற்கான காலம் ஆகிய தகவல்களை நீங்கள் Pdf வடிவில் பெறலாம்.
கட்டணம் ரூ.101 மட்டுமே.
TAMIL JATHAGAM | ஜோதிட தகவல்களின் மகா சங்கமம்
அண்மை பதிவுகள்
ஜோதிட தகவல்களின் மகா சங்கமம்
TAMIL JATHAGAM | ஜோதிட தகவல்களின் மகா சங்கமம்
12 Rasi in Tamil and Basic Characteristics
ராசி சக்கரத்தில் 12 ராசி வீடுகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களும் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டுள்ளன. மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் ராசி சக்கரத்தில் உள்ளன. வாருங்கள் நண்பர்களே, ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தனித்தன்மையான நற்பண்புகளைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்…
12 ராசிகள் மற்றும் அதன் தனித்தன்மையான நற்பண்புகள்
12 Rasi in Tamil and Basic Characteristics
மேஷம் (Aries)
இவர்கள் வைராக்கியம் அல்லது பிடிவாதம் குணம் கொண்டவர்கள். தேச நலன் பற்றிய சிந்தனை இருக்கும். எல்லா காரியத்தையும் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்ற பண்பு இருக்கும். இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள். இவர்கள் பெரியவர்களிடம் மட்டுமே கீழ்படிவார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இருக்கும். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.
ரிஷபம் (Taurus)
இவர்கள் பொதுவாக அகிம்சை வாதிகள். இவர்களிடம் இரக்க குணம் இருக்கும். இவர்கள் எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காரணத்தை அறிய முற்படுவார்கள். இவர்கள் அனைவரிடமும் அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். பெருந்தன்மையாக இருப்பது இவர்களது இயல்பு குணம். இவர்கள் பண்புடைமை வாதிகள் இவர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்.
மிதுனம் (Gemini)
எழுதுதல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள். (அதாவது, இடத்திற்கு தகுந்தார் போல் செயல்படுபவர்கள்) இவர்களிடம் நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். இவர்கள் கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவில் வல்லவர்கள். இவர்களுக்கு எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். இவர்கள் காரண காரியம் அறிந்து செயல்பட கூடியவர்கள். இவர்களது இயல்பு தந்திரமாக பேசுதல் எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்கும்.
கடகம் (Cancer)
தொண்டு செய்தல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புதல் என்பது இவர்களது இயல்பு. மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். மன்னிக்கும் குணம் பெற்றவர்கள்.
சிம்மம் (Leo)
அனைத்து துறையிலும் தலைமை வகிக்க கூடியவர்கள். அனைத்து செயல்களிலும் இவர்களது ஒத்துழைப்பு மற்றவர்களுக்கு நன்றாக இருக்கும். சுதந்திரமாக செயல்பட கூடியவர்கள். எதையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர்கள். ஒற்றுமை குணம் உடையவர்கள். தயாள குணம் கொண்டவர்கள். எதையும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பு இருக்கும். (இன்ப,துன்பங்களை நல்லவை,கெட்டவைகளை…)
கன்னி (Virgo)
தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அனைவரிடமும் பழகுதல் என்பது இவர்களது இயல்பு. சுதந்திரமான நிலை உடையவர்கள். தனிநபர் உரிமை பற்றி பேசுபவர்கள். தூய்மையான எண்ணம் உடையவர்கள். எதிலும் உண்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். நட்பு பாராட்டக் கூடியவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்.
துலாம் (Libra)
சமநிலை காத்தல் என்பது இவர்களது இயல்பு. பாரபட்சமின்மையின்றி நடக்கக் கூடியவர்கள். எதிலும் நியாயம் பேசுதல் இவர்களது இயல்பு. நடுநிலையாக நடக்கக் கூடியவர்கள். இவர்கள் அணிந்திருக்கும் துணியில் சிறு கறை இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
விருச்சிகம் (Scorpio)
உதவும் மனப்பான்மை உடையவர்கள். விழிப்புணர்வுடன் இருத்தல் இவர்களது பண்பு (எச்சரிக்கையாக இருத்தல்) எதிலும் சீரிய யோசனை உடையவர்கள். பகுத்தறிதல் இவர்களது இயல்பு. இவர்கள் அதிகம் மற்றவர்களை கண்காணிப்பார்கள். அறிவுநுட்பம் உடையவர்கள். கோபம் வந்துவிட்டால் தேள் போன்று வார்த்தைகளை கொட்டி விடுவார்கள்.
தனுசு (Sagittarius)
லட்சியம் உடையவர்கள். உழைப்பை நேசிப்பது இவர்களது இயல்பு. திடமான நோக்கம்/குறிக்கோளுடன் இருப்பார்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பவர்கள். நம்பிக்கைக்குரியவர்கள். ஊக்கத்துடன் முயற்சியும் வேண்டும் என்று நினைப்பவர்கள்.
மகரம் (Capricorn)
அமைதி குணம் உடையவர்கள். கண்ணியம்,கட்டுப்பாடு உடையவர்கள். சிறந்த வேலைக்காரர். எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக முடிப்பார்கள். எதிலும் பொறுமை குணம் உடையவர்கள்.
கும்பம் (Aquarius)
சுய அதிகாரம் உடையவர்கள். மதிப்பு மற்றும் மரியாதையுடன் நடக்கக் கூடியவர்கள். இவர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்தினால் இவர்களுக்கு பிடிக்காது. ரகசியம் காப்பாளர்கள். பொது கட்டுப்பாடு உடையவர்கள். சுயமரியாதை குணமடையவர்கள்.
மீனம் (Pisces)
நற்குணம் உடையவர்கள். நடப்பதை முன்கூட்டியே அறிபவர்கள் ஞானியர்கள் நேர்மறை சிந்தனை உடையவர்கள். மீன் போன்ற விழிகளை பெற்றிருப்பவர்கள். முன்யோசனை உடையவர்கள். விருந்தோம்பல் பண்பு உடையவர்கள். மேலும் 12 ராசிகள் பற்றிய விரிவான அடிப்படை குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
TAMIL JATHAGAM | ஜோதிட தகவல்களின் மகா சங்கமம்
12 Zodiac Signs and 27 Stars in Astrology
ராசிகள் – Zodiac Signs | நட்சத்திரங்கள் – Stars |
மேஷம் – Aries | அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் முடிய – Ashwini, Bharani, upto 1st phase of Krithikai |
ரிஷபம் – Taurus | கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ஆம் பாதம் வரை – From Krithikai 2nd,3rd,4th phase, Rohini and upto Mirugaseerisham 1st,2nd phase. |
மிதுனம் – Gemini | மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம் முடிய – From Mirugaseerisham 3rd,4th phase, Ardra, upto Punarpoosam 1st,2nd,3rd phase |
கடகம் – Cancer | புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் – Punarpoosam 4th Phase, Poosam, Ayilyam |
சிம்மம் – Leo | மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் முடிய – Makam, Pooram, and upto Uthiram 1st phase |
கன்னி – Virgo | உத்திரம் 2,3,4ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம் – From Uthiram 2nd,3rd,4th phase, Astham and upto Chithirai 1st, 2nd phase |
துலாம் – Libra | சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம் முடிய – From Chithirai 3rd,4th phase, Swathi and upto Vishakam 1st, 2nd, 3rd phase |
விருச்சிகம் – Scorpio | விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை முடிய – From Vishakam 4th phase, Anusham, Kettai |
தனுசு – Sagittarius | மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் வரை – Moolam, Pooradam and upto Uthradam 1st Phase |
மகரம் – Capricorn | உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் முடிய – From Uthradam 2nd, 3rd, 4th phase, Thiruvonam (Shravan) and upto Avittam 1st, 2nd phase |
கும்பம் – Aquarius | அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம் முடிய – From Avittam 3rd,4th phase, Sathayam and upto Poorattathi 1st, 2nd, 3rd phase |
மீனம் – Pisces | பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய – From Poorattathi 4th phase, Uthirattathi and Revathi |
27 நட்சத்திரங்கள் அதிபதிகள் மற்றும் 12 ராசி அதிபதிகள்
நாம் இந்த பதிவில் 27 நட்சத்திரங்கள் மற்றும் அதனுடைய அதிபதிகள் மற்றும் 12 ராசி அதிபதிகள் யார் யாரென்று எளிதாக புரியும் வண்ணம் கூறியுள்ளோம் படித்து தெரிந்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர அதிபதி அட்டவணை அடிப்படையில்தான் திசா காலங்கள் ஒருவருக்கு பிறந்தவுடன் முதலில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவரின் பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் எனில் அவருக்கு முதலில் வரும் தசை செவ்வாய் தசை ஆகும்.
27 நட்சத்திரங்கள் அதிபதி
நட்சத்திர அதிபதி அட்டவணை
குரு – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி |
சூரியன் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம் |
சந்திரன் – ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் |
புதன் – ஆயில்யம், கேட்டை, ரேவதி |
கேது – அஸ்வினி, மகம், மூலம் |
ராகு – திருவாதிரை, சுவாதி, சதயம் |
செவ்வாய் – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் |
சனி – பூசம், அனுஷம், உத்திரட்டாதி |
12 ராசி அதிபதிகள்
ஒவ்வொரு ராசியையும் இயக்கும் கிரகங்கள் ராசி அதிபதி ஆவார்கள்(ராகு கேது தவிர) ஒவ்வொரு நவகிரகத்திற்கும் ஒரு ராசி வீடாகும். சில கிரகத்திற்கு இரண்டு வீடுகள் உண்டு. நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் ராகு மற்றும் கேது கிரகத்திற்கு வீடு கிடையாது. மாறாக அவர்கள் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாகும்.
ராசி | அதிபதி |
மேஷம் | செவ்வாய் |
ரிஷபம் | சுக்கிரன் |
மிதுனம் | புதன் |
கடகம் | சந்திரன் |
சிம்மம் | சூரியன் |
கன்னி | புதன் |
துலாம் | சுக்கிரன் |
விருச்சிகம் | செவ்வாய் |
தனுசு | குரு |
மகரம் | சனி |
கும்பம் | சனி |
மீனம் | குரு |
ராசி அதிபதி காரகத்துவம்
- மேஷம், விருச்சிக ராசி அதிபதி செவ்வாய். இவர் நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் காரகனான இருக்கிறார்.
- ரிஷபம் , துலாம் ராசி அதிபதி சுக்கிரன். இவர் களத்திர காரகன் ஆவார்.
- மிதுனம், கன்னி ராசி அதிபதி புதன். இவர் கல்வி, புத்தி காரகன் ஆவார்.
- கடக ராசி அதிபதி சந்திரன். இவர் மனம், தாய்க்குக் காரகன் ஆவார்.
- சிம்ம ராசி அதிபதி சூரியன். இவர் உடல் , தந்தைக்குக் காரகன் ஆவார்.
- தனுசு , மீனம் ராசி அதிபதி குரு. இவர் தனம், புத்திர காரகன் ஆவார்.
- மகரம் , கும்பம் ராசி அதிபதி சனி. இவர் ஆயுள், தொழில் காரகன் ஆவார்.