மேஷ ராசியில் பிறந்தவரா நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் உங்களைப் பற்றியும் மற்றும் உங்களது தொழில் ரகசியங்களை பற்றியும் | Mesha Rasi In Tamil

மேஷ ராசியில் பிறந்தவரா நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் உங்களைப் பற்றியும் மற்றும் உங்களது தொழில் ரகசியங்களை பற்றியும் | Mesha Rasi In Tamil

மேஷ ராசி

12 ராசிகளில் இந்த மேஷம் மற்றும் விருச்சக ராசி ஆனது நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய ராசி வீடாகும்.

மேஷ ராசியினர் இயற்கையாகவே வெப்பமான உடல்நிலையை பெற்றவர்களாக இருப்பார்கள்.

மேஷ ராசியினரின் குண நலன்கள்

மேஷ ராசியினருக்கு எதுவாக இருந்தாலும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.

பிறர் மீது தன்னுடைய அதிகாரத்தை செலுத்த ஆசைப்படும் நபராக இருப்பார்கள்.

மேஷ ராசியினர் குடும்பத்தின் மீது அதிகப்படியான அன்பும், அக்கறையும் காட்டும் திறனை இயல்பிலேயே பெற்றிருப்பார்கள்.

தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரர்கள்.

கண்மூடித்தனமாக அனைத்தையும் நம்புவார்கள்.

மேஷ ராசியினர் சுய கௌரவம் பார்க்கக் கூடியவர்கள்.

உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

கோபக்காரர்கள்.

மேஷ ராசியினர் தன்னுடைய பயணப் பாதையில் இருந்து பாதை மாறும் சுபாவம் உடையவர்கள்.

துணிச்சலுக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லலாம்.

வீர தீர செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள்.

பகைமை உணர்வை மறக்க இயலாத குணம் பெற்றவர்கள்.

அச்சமின்மை (பயம் அறியாமல் இருப்பது) என்பது இவர்களுடைய சொத்து.

இவர்களுக்கு மனதில் பிடித்தால் மட்டுமே எந்த ஒரு வேலையையும் எடுத்து செய்வார்கள்.

தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்பவர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்

பொதுவாக மேஷ ராசியினருக்கு நன்மை தரும் தொழில்களும் மற்றும் மேஷ ராசியினர் அதிகப்படியாக வேலை செய்யும் தொழில்களையும் கீழே தொகுத்து கொடுத்துள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள்.

காவல்துறை
காவலாளி அதாவது வாட்ச்மேன்
மெய் காவலர் பதவி
விவசாயம் செய்தல்
ராணுவத் துறை
பல் மருத்துவர்
அரசு அதிகாரி
அரசு சார்ந்த தொழிற்சாலைகள்
மன நோய் மருத்துவர்
விமானி

இரும்பு மற்றும் உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள்
உளுந்து மொத்த வியாபாரம் செய்தல்
துப்பாக்கி தொழிற்சாலை
பம்பு செட்டு மற்றும் கனரக வாகனம் தொழிற்சாலை ஆகியவற்றில் பணி புரிதல்
பொறியியலாளர் மற்றும் கட்டட பொறியியலாளர்
ஆட்டோ ஓட்டுதல்
மின்விசிறி மற்றும் மின் சாதனம் சம்பந்தப்பட்ட வியாபாரங்களை செய்தல்
ஆயுள் காப்பீட்டு முகவர்
ஆராய்ச்சித்துறை
சுரங்க வேலை

சிவப்பு நிற சம்பந்தப்பட்ட பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்தல் (அதாவது ஆப்பிள், மாதுளம்பழம் போன்றவை)
சிவப்பு நிற மிளகாய் வற்றல் தொழில் செய்தல்
செங்கல் தொழில் செய்தல்
விற்பனையாளர்
தரகர்
மிருகங்களுக்கு பயிற்சி அளித்தல்
மேஷ ராசியினருக்கு உரியவை

mesha rasi in tamil

மேஷ ராசியின் உருவம் ➨ ஆடு
மேஷ ராசியின் அடிப்படையில் ஜாதி ➨ சத்ரியன்
ராசிக்கல் ➨ பவளம்
குணம் ➨ கோபம்
மேஷ ராசி அதிர்ஷ்ட நிறம் ➨ சிவப்பு
மேஷ ராசி அதிர்ஷ்ட எண் ➨ 9
திக்கு அல்லது திசை ➨ கிழக்கு
மாதம் ➨ சித்திரை
யோகமான நாட்கள் ➨ செவ்வாய் மற்றும் ஞாயிறு
பார்வை ➨ கடைக்கண் பார்வை
நட்பு ராசிகள் ➨ சிம்மம், தனுசு
தற்காலிக நட்பு ராசிகள் ➨ துலாம் மற்றும் மகரம்
பகை ராசிகள் ➨ மிதுனம், கன்னி, கடகம்

குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள நட்பு மற்றும் பகை ராசிகள் மேச ராசியினருக்கு பொதுவானவை. ஒவ்வொருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் நட்பு மற்றும் பகைராசிகள் மாறுபடும்.

மேஷ ராசியினருக்கு உகந்த கிழமைகள்
யோகமான நாட்கள் ➨ செவ்வாய் மற்றும் ஞாயிறு
அன்பை அல்லது காதலை வெளிப்படுத்த உகந்த நாட்கள் ➨ செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை
வியாபாரம் செய்ய உகந்த நாட்கள் ➨ செவ்வாய் மற்றும் சனிக்கிழமை
மேஷ ராசிக்காரர்களின் தொழில் குறிப்புகள்

சிம்ம ராசிக்காரர்கள் உடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம்.

கடக ராசியில் பிறந்தோரிடம் கவனமாக செயல்பட வேண்டும்.

துலாம் ராசியில் பிறந்தோரிடம் பாடத்தை கற்கலாம்.

தொழில் கூட்டாளிகளாக தனுசு மற்றும் சிம்மம் நன்று.

சட்ட ஆலோசனைக்கு தனுசு ராசி நன்று.

மகர ராசிக்காரர்கள் மூலம் வேலைவாய்ப்பை பெறலாம்.

எப்போதும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் பணிவுடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட்டால் எதில் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்
தலைவலி
சீரற்ற பல் வரிசை
முகத்தில் பிரச்சனை
வயதான பின்பு மூளை சார்ந்த பிரச்சனைகள்
கண்ணில் பாதிப்பு
தலையில் பாதிப்பு
மேஷ ராசிக்காரர்களின் வீட்டின் அமைப்பு

மேஷ ராசி, சிம்ம ராசி, தனுசு ராசி போன்ற ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசை வாயில் நல்லது. இதனால் பொருள் வரவு மற்றும் எல்லா சுகங்களும் கிடைக்க பெறும்.

மேஷ ராசியினர் குறிப்பாக வடக்கு பக்கம் பார்த்த வீட்டில் குடியிருந்தால் (வடக்கு வாசல்) வடக்கு சுவர்களில் விரிசல் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.

பொதுவாக மேஷ ராசியினர் வாடகை வீடு அல்லது சொந்த வீடு என எந்த வீட்டில் வசித்தாலும் அங்கு ஏதாவது தோஷம் அல்லது குறைகள் இருந்தால் நிவர்த்தி அடைய கீழ்க்கண்ட எண் யந்திரத்தை பயன்படுத்தி சரி செய்யலாம்.

2 7 6
9 5 1
4 3 8
பரிகாரங்கள்

மேஷ ராசிக்காரர்கள் துன்பத்திலிருந்து விடுபடவும், வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபடுவது மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும்.

mesha rasi in tamil

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது நல்லது.

நவகிரக சன்னதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி விளக்கேற்றி வழிபட துன்பங்கள் நீங்கும்.

ஆஞ்சநேயருக்கு செந்தூர அபிஷேகம் செய்வது நன்மை பயக்கும்.

சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்.

செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேஷ ராசியினர் தங்கள் வாழ்வில் பொருள், பணம் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடும் போது சூரிய பகவானுக்குரிய கிருத்திகை, உத்திராடம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் முயற்சிகளை மேற்கொள்வது நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

மேஷ ராசியினருக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உடைகளை அணிந்து கொள்வது நன்மை பயக்கும். இது அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்கும்.

ஆண்கள் செம்பு மோதிரம் அல்லது செம்பு காப்பினை வலது கையில் அணிந்து கொள்வது நன்மை பயக்கும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு யாருக்காவது நோயின் தாக்கம் கடுமையாக இருந்தால், அவை குறைய இரண்டு பவளக்கல் சிவப்பு நிறத்தில் உள்ளதை வாங்கி ஒன்றை ஓடும் தண்ணீரில் கிழக்கு நோக்கி நின்று நீரில் போட வேண்டும். மற்றொரு பவளக்கல்லை மோதிரமாக அணிந்தால் நல்லது.

இதையும் படிக்கலாமே

rasi palan today

ஜாதக கட்டம் அல்லது ராசி கட்டம் எனப்படும் 12 வீடுகளுக்கான பலன்கள் | 12 Houses in Astrology in Tamil

Leave a Comment